Vasagam
DigitalOcean Referral Badge
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
No Result
View All Result
Vasagam
Home அகம் & புறம்

வேலும் தமிழும்

விகடகவி by விகடகவி
24/08/2021
in அகம் & புறம்
0
Lord Murugan Vel
1
SHARES
393
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் மொழி மற்றும் அதன் மக்களை பற்றி பேசும்போது முருக கடவுளை பற்றி கூறாமல் இருக்கவே முடியாது. முருகனைப் பற்றி பேசுகையில் அவர் கையில் இருக்கும் வேலை விட்டுவிட முடியுமோ “வேலுண்டு வினை இல்லை” ஆச்சே. முருகனும் வேலும் ஒன்று தான் என்பார்கள் நம் முன்னோர்கள்.

அதன் அர்த்தத்தை பின்வருமாறு சொல்கிறேன். சரி, மேலே குறிப்பிட்ட தலைப்பு போல முருகனுக்கும் தமிழுக்கும் இடையே என்ன சம்பந்தம், ஏன் தமிழ் மக்கள் குறிப்பாக முருக கடவுளை இவ்வளவு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் பூஜிக்கிறார்கள். சற்று விரிவாக நான் கண்டு, படித்து, கேட்ட செய்திகளை இங்கே பதிவிடுகிறேன்.

தமிழும் முருகனும்

தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, பக்தர்களுக்கு ஒளி குடுக்கும் ஆறுமுகனின் கண்கள் பன்னிரெண்டு.

தமிழி எழுத்துக்களை இனமாக பிரித்தால். மூன்று இனம் வல்லினம், மெல்லினம், இடையினம்.

  1. வல்லினம் – க, ச, ட, த, ப, ற
  2. மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
  3. இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள

இந்த மூன்றில் ஒவ்வொரு இனத்திலும் ஒரு எழுத்தை எடுத்து “முருகு” என்று பெயர் வைத்துள்ளார்கள். அதே போலத்தான் “தமிழ்” சொல்லும் மூன்றில் ஒவ்வொரு இனத்திலும் ஒரு எழுத்தை எடுத்து பேர் சூட்டி சிறப்பித்திருக்கிறார்கள். அதில் சிறப்பு ழகரம் தமிழ் மொழிக்கே உறிய சிறப்பு.

  1. “தமிழ்” என்ற சொல்லில் “த” – வல்லினம். “மி” – மெல்லினம். “ழ்” – இடையினம்.
  2. “முருகு” என்ற சொல்லில் “மு” – மெல்லினம். “ரு” – இடையினம். “கு” – வல்லினம்.

“முருகு” என்ற பெயரின் காரணம் “அழகு, இளமை, பெருமை, உயர்வு, முதுமை இல்லாமை” போன்ற இன்னும் பல அர்த்தங்கள் உள்ளன.

இனம் ஒன்றுக்கு ஆறு எழுத்தாக பிரித்தார்கள் அப்படி பார்க்கும் பொது இனம் ஒன்றுக்கு எழுத்துக்கள் ஆறு முருகனின் சிறங்கள் (தலைகள்) ஆறு.

முருகனுக்குத் திருமுகமும் கைகளும் மொத்தம் பதினெட்டு. தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. (வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய ஒவ்வொரு தமிழின எழுத்துக்கள் ஆறு. மொத்தம் பதினெட்டு).

வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய தமிழ் இனங்களில் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் உட்கரு விளக்கம் கூறும் அர்த்தம் தமிழ் இனங்களின் எழுத்து ஆறில் “ச, ர, வ, ண, ப, வ” உள்ளடங்கும்.

முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து “ஃ” தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுத எழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், அந்த புள்ளிகளை இணைத்தால் வேல் வடிவில் அமைந்து இருக்கும். இந்த ஆயுத எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை.

கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் குழந்தை முழுமையாக வளர 247 நாட்கள் ஆகின்றன என இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இதை கண்டு பிடித்தான். புரியவில்லையா? தமிழில் உள்ள மொத்த எழுத்தக்கள் 247.

முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றால் அழகு. எனவே, முருகன் வேறு, தமிழ் வேறு அல்ல.. முருகனே தமிழ், தமிழே முருகன்.

சரி மேலே குறிப்பிட்ட தகவலை ஆன்மிகம் வழியாக இல்லாமல் நாத்திகம் பேசுவோர் வாயிலாக பார்த்தாலும் கூட, அன்றைய தமிழர்கள் பேசுகின்ற மொழிக்கு உருவம் கொடுத்து பேசுகின்ற மொழியை அந்த உருவத்தின் ஊடாக வலிபட்டு கொண்டாடி வாழ்ந்திருக்கிறார்கள்.

அன்றைய தமிழர்கள் விஞ்ஞானிகள். தமிழர்களின் வாழ்க்கையையும் மொழியையும் ஒன்றாக கலந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

Tags: சிவன்தமிழ்நக்கீரன்முருகன்மொழி
Previous Post

ஓணம் தமிழர் பண்டிகையா?

Next Post

அ-வில் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

விகடகவி

விகடகவி

நான் விகடகவி, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், தமிழ் வரலாறு, ஆன்மிகம் மற்றும் தமிழர் பாரம்பரியங்களை ஆழமாகத் தோண்டும் வகையில் எழுத்துகளைப் பதிவு செய்கிறேன். எங்கள் மரபின் பெருமையை புதுப்பிக்கும் நோக்கில் உண்மையான தகவல்கள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகளை வழங்குவதே என் இலக்கு. தமிழ் இலக்கியத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நடைப்பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள்!

Next Post
அ-வில் தொடங்கும் 100 தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

அ-வில் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வள்ளுவன் வாக்கு

தூது - பொருட்பால்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
விளக்கம்:
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

பிரபலமான இடுகைகள்

APJ Abdul Kalam
மாமனிதர்கள்

அமெரிக்காவை மிரளவைத்த இந்திய ஜனாதிபதி

02/04/2025
தமிழர்களின் பண்டைய தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் – ஓர் ஆய்வு
ஆன்மீகம்

தமிழர்களின் பண்டைய தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் – ஓர் ஆய்வு

21/03/2025
What is spirituality in Tamil
ஆன்மீகம்

ஆன்மீகம் என்பதென்ன? பகுத்தறிவுடன் ஆன்மீகத்தின் உண்மையான வரையறை

04/01/2025
Ghibli Style Images
தொழில்நுட்பம்

ChatGPT-ல் இலவசமாக ஜிப்ளி ஸ்டைல் புகைப்படங்கள்: பெற சிறந்த வழிகள்!

31/03/2025
Facebook Twitter Pinterest Instagram RSS
Vasagam

Vasagam, A digital patron of Tamil heritage by publishing old stories, facts behind every belief, literature, old technology, science, ancient medicines, food and history.

General

  • About Us
  • Contact Us
  • Sitemap

Legal

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Cookie Policy

© Vasagam. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்

© Vasagam. All Rights Reserved.

Go to mobile version