பூனை யாருக்கும் தீங்கு விளைவிக்காத மென்மையான வீட்டு விலங்கு. பூனையை யாரும் விரோதியாக பார்ப்பது இல்லை, அன்பும் பாசமும் கூட காட்டுவதுண்டு. ஆனால் அதை ஏன் சகுனத்துக்கு மிக முக்கியதுவம் அளித்துள்ளனர்?
நம்பிக்கை:
பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வலி செல்ல வேண்டாம் என்ற ஒரு நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. பூனை வலமிருந்து இடம் சென்றால் நல்லது என்றும், இடமிருந்து வலம் சென்றால் தீய சகுனம் என்றும் கூறுகின்றனர்.
அறிவியல்:
பூனைகளுக்கு மனிதர்களை விட கூறிய உணர்வுகள் உள்ளது. மனிதர்களை விட ஆறில் ஒரு பங்கு மட்டுமே பயன்படுத்தி வேட்டையாடும் திறன் கொண்டவை. எதிரி தொலைவில் இருக்கும்போதே உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. மேலும் பூனை எப்போதும் எச்சரிக்கை சுபாவத்துடனேயே சுற்றி திரியும். அவ்வாறு காட்டு (ஓநாய் போன்றவை) விலங்கை கண்டோ, வேறொரு பூனை துரத்துவதனாலோ, யாரேனும் விரட்டுவதனாலோ அல்லது தொலைவில் இரை இருப்பதை கண்டு வேட்டையாடவோ குறுக்கே பாய்ந்து ஓடி வரும் அப்போது அது வரும் திசை நோக்கி சென்றால் அதன் மீதோ அதை துரத்தி வரும் பூனை மேலோ இடறிவிடலாம் அல்லது காட்டு விலங்கிடம் நாம் அகப்பட்டு விடலாம்… இதை காலப்போக்கில் வலது இடது என்று அலங்கரித்து சகுன விதியாக அமைத்து கூறுகின்றனர்.