அமெரிக்காவை மிரளவைத்த இந்திய ஜனாதிபதி

APJ Abdul Kalam

Image Credit: Getty Images

2006-ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கு வருகை புரிந்தபோது, அவருக்காக பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அவர்களின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திடம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்:

  1. பழைய சிவப்பு கம்பளத்தை அகற்ற வேண்டும்: குடியரசு மாளிகை ‘ராஷ்டிரபதி பவனில்’ உள்ள பழைய சிவப்பு கம்பளம் (Red Carpet) அகற்றப்பட்டு, புதியதொரு கம்பளம் பொருத்தப்பட வேண்டும். இது அமெரிக்க அதிபரின் வருகைக்கு உரிய மரியாதை என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.
  2. ராஷ்டிரபதி பவனின் பாதுகாப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் குடியரசு மாளிகையில் இருக்கும் வரை, அங்குள்ள பாதுகாப்பு அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகள் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரிடம் வந்தபோது, அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இதில் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முடிவை ஒரே ஒரு நபர் மட்டும் எதிர்த்தார் – அவர் வேறு யாரும் அல்ல, முன்னாள் இந்திய ஜனாதிபதி பாரத் ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

அமெரிக்க அதிபர் வருகையில் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் எடுத்த உறுதியான முடிவு

அப்துல் கலாம் ஐயா இந்த இரண்டு கோரிக்கைகளையும் கடுமையாக எதிர்த்தார். அவரது நிலைப்பாடு தெளிவாக இருந்தது:

அமெரிக்க அதிகாரிகள் பலமுறை திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்தாலும், அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இந்தியாவுக்கு வராமல் இருந்தாலும் பரவாயில்லை கலாம் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. அவரது நேர்மையும் நாட்டுப்பற்று உணர்வும் அதிகபலம் வாய்ந்தவையாக இருந்ததால், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

திறமை, தன்னம்பிக்கை, மற்றும் நாட்டுப்பற்றின் சிறந்த எடுத்துக்காட்டு

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒருபோதும் அதிகாரத்திற்கு அஞ்சியவர் இல்லை. அவர் எப்போதும் இந்தியாவின் பாரம்பரியத்துக்கு சுயமரியாதைக்கும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுத்தவர்.

இந்த நிகழ்வு, இந்தியாவின் தேசிய மரியாதையை காப்பாற்ற ஒரு தலைவர் எடுத்த தன்னம்பிக்கையுள்ள முடிவாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பெருமையை எந்தளவிற்கு அவர் பாதுகாத்தார் என்பதற்கான இன்னொரு உதாரணம் இது.

இந்த சம்பவம் ஒரு முக்கியமான பாடம் புகட்டுகிறது – அதிகாரத்திற்கு அஞ்சி, உள்நோக்கத்தோடு முடிவுகள் எடுக்காமல், நேர்மையான முடிவுகளை எடுக்கும் தலைவர்களே உண்மையான நாட்டு தலைவர்.

Exit mobile version