இந்தியா ஆன்மீக மரபுகளில் மிகவும் சிக்கலான மற்றும் பல்வேறு பரிமாணங்கள் உள்ளடக்கிய ஒரு பரந்த பூமி ஆகும். மனிதர்கள் ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய பல வழிகளைப் பின்பற்றி வருகிறார்கள். இந்த ஆன்மீக பாதையில் துறவு, யோகம், மௌனம், சித்தம் மற்றும் தவம் என பல்வேறு பிரிவுகளும், பாரம்பரியங்களும் உள்ளன. இவற்றின் எல்லைகளை அடைந்த ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், துறவிகள் போன்ற இவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களுக்குள் என்ன வித்தியாசம்? என்பதைக் விரிவாகப் பார்ப்போம்.
1. ரிஷிகள் (Rishis)
ரிஷிகள் வேதகாலத்திற்கும் முந்தைய பிரபல ஆன்மிகர்கள். இவர்கள் வெவ்வேறு கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கினார்கள். நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும் சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தவர்.
சப்த ரிஷிகள்: அகத்தியர், அத்ரி, அகிரர், பிருகு, கௌதமர், கசியபர் மற்றும் வசிஷ்டர்.
தன்னுடைய உச்சத்தை முழுமுதல் யோகியான ஆதிசிவன் தொட்டபோது, பலரும் அவர் ஜோதியால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள், சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்ட இந்த ஏழு முனிவர்கள். ஆதியோகியின் புரிதலையும் ஞானத்தையும் பெற்று பூமி முழுமைக்கும் விநியோகிப்பதற்கான பாத்திரங்களே அவர்கள். சிவனிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் ஒலியினை உள்வாங்கி அதன்மூலமாக வேதங்கள், உபநிடதங்கள், மந்திரங்கள், புராணங்கள், இறைவனை அடைவதற்கான வழிமுறைகள், ஞானங்கள் ஆகியவற்றை உலகிற்கு அளித்தவர்கள். அதனாலேயே இந்த ரிஷிகள் அணைத்து புராணங்களிலும் ஆங்காங்கே தென்படுவார்கள்.
2. சித்தர்கள் (Siddhars)
சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித்தி என்றால் ‘அறிவு’, சித்தை உடையவர்கள் சித்தர்கள். “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது உள்ளார்ந்த பொருள். வானியல், கணிதம், மருத்துவம், யோகம், அறிவியல், புவியியல் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றுள் உயர்த்த ஞானத்தை பெற்றவராவர். அந்த ஞானத்தை கொண்டு அட்டமா சித்துக்களை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.
திருமந்திரம் விளக்கும் அட்டமா சித்திகள்:
அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகைபிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகைவசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.
திருமூலர்
அட்டமா சித்திகள் விளக்கம்
- அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
- இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
- கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
- பிராத்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
- பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
- ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
- வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.
சித்தர் வாழ்வினை வரையறுத்தவர் சித்தர்களுக்கெல்லாம் சித்தரான அகத்தியர். இவரே தமிழ் மொழிக்கு இலக்கணம் பிறப்பித்தவர் அதன்வழி தோன்றலாலே சித்தர்கள் தமிழர்களுக்கே உரித்தான ஒரு ஆன்மீக வழி. “சித்தி” என்ற சொல் கூட தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது, இது ஆன்மிக வளர்ச்சியில் உச்ச நிலைமையை குறிக்கிறது. சித்தர்கள் ஆன்மீகத்திலும், மருத்துவத்திலும், அறிவியலிலும் முன்னோடிகள். தமது வாழ்க்கையை முழுமையாக பொதுநலனுக்காக அர்ப்பணித்தவர்கள்.
3. முனிவர்கள் (Munivars)
முனிவர்கள் அல்லது மௌனிகள், முனி என்பது சமஸ்கிருத சொல் “முனீஸ்” என்பதிலிருந்து வந்தது. கிரேக்கத்தில் “முனி” என்றால் மாயாஜாலம் அல்லது தந்திரம் செய்பவர்கள் என பொருளாகிறது. முனிவர்கள் நீண்ட நெடிய தவத்தால் முக்தியம் அளவிட முடியாத சக்தியும் பெற்று இறைவனுடைய திருவடிகளை அடைவார்கள். ஆன்மீக வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கப்படுவார்கள்.
முனிவர்களின் சிறப்பு: பிரபஞ்ச உண்மைகளை அறிவதற்கும், மும்மலங்கள் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை இவற்றை விட்டொழித்து இறைவனை அடைவதற்கும், கடும் தவம் செய்வார்கள்.
4. யோகிகள் (Yogis)
யோகிகள் என்பவர்கள் யோககலையிலும் ஆயூர்வேத மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் உடல் மற்றும் மன அமைதியை பெற, யோகாசனங்கள், பிராணாயாமா மற்றும் தியான முறைகளைப் பின்பற்றுவார்கள்.
யோகியின் பணிகள்:
- யோகத்தினால் உடல், மன நலத்தை மேம்படுத்துதல்.
- பிராணாயாமம், தியானம், உடல் கட்டுப்பாடு.
5. துறவிகள் (Sannyasis)
துறவிகள் என்பது சமஸ்கிருத வார்த்தையான “சந்நியாசி” என்பதன் தமிழ் சொல்லாகும். துறவிகள் உலக இன்பங்களை துறந்து, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் ஆசையை துறந்து, தியானம், வேதப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
துறவிகளின் பணி: உலகம் முழுவதும் உள்ள மதங்களை சார்ந்து, ஆன்மீகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது.
ஆன்மீக உலகில் தர நிலை (Hierarchy in the Hindu Spiritual World)
இந்த ஆன்மீக உலகில், ஒவ்வொரு ஆளுமையும் வெவ்வேறு நிலைகளை வகிக்கின்றனர். பொதுவாக:
- ரிஷிகள்: உன்னதமான ஞானிகள், வேத சாஸ்திரங்களை எழுதுபவர்கள்.
- சித்தர்கள்: அறிவியல், மருத்துவம், ஆன்மீகத்திலும் பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள்.
- முனிவர்கள்: தியானம் மூலம் பிரம்மத்தை உணரும் முனைந்தவர்கள்.
- யோகிகள்: உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒற்றுமையை அடைவதற்கான உச்ச நிலை.
- துறவிகள்: உலக ஆசைகளை துறந்து முழுமையாக தெய்வத்திற்கே அர்ப்பணிக்கப்படுபவர்கள்.
ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், துறவிகள் ஆகியோருக்குள் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையான வழியில் ஆன்மிக வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நாம் எந்தவொரு வழியையும் பின்பற்றினாலும், அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஆன்மீக உயர்வை அடைய முடியும்.