- சங்ககால தெய்வ வழிபாடு
- இயற்கை வழிபாடு
- முன்னோர் வழிபாடு
- பண்டைய வழிபாட்டு முறைகள்
- சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள்
- காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள்
தமிழர்களின் பண்டைய வரலாற்றை ஆராயும்போது, அவர்களின் தெய்வ வழிபாட்டு முறைகள் மிகவும் தனித்துவமானவை என்பது தெரியவருகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்திகளின்படி, தமிழர்கள் தெய்வங்களை காட்டிலும் இயற்கையையும், முன்னோர்களையும் வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகள் அவர்களின் வாழ்வியல், மற்றும் தொழில் சார்ந்து வடிவமைந்துள்ளன.
சங்ககால தெய்வ வழிபாடு
சங்க காலத்தில் தமிழர்கள் ஐந்திணை சார்ந்த தெய்வங்களை வழிபட்டு வந்தனர்:
குறிஞ்சி நில தெய்வம்
முருகன் குறிஞ்சி நிலத்தின் முதன்மை தெய்வமாக வணங்கப்பட்டார். மலைகளிலும், குன்றுகளிலும் வாழ்ந்த மக்கள் வேட்டையாடுதல் மற்றும் தேன் சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். இதனால் முருகனை வேலன் என்றும் அழைத்தனர்.
முல்லை நில தெய்வம்
திருமால் (மாயோன்) முல்லை நிலத்தின் தெய்வமாக வணங்கப்பட்டார். கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் இவரை வழிபட்டனர். காடுகளையும், மேய்ச்சல் நிலங்களையும் பாதுகாக்கும் தெய்வமாக கருதப்பட்டார்.
மருத நில தெய்வம்
இந்திரன் மருத நிலத்தின் தெய்வமாக வணங்கப்பட்டார். விவசாயம் செய்யும் மக்கள் மழைக்காக இந்திரனை வேண்டினர். நெல் விளைச்சலுக்கும், வளமான வாழ்விற்கும் இவரை வணங்கினர்.
நெய்தல் நில தெய்வம்
வருணன் கடல் சார்ந்த பகுதிகளின் தெய்வமாக வணங்கப்பட்டார். மீனவர்கள் கடல் பயணத்திற்கு முன் இவரை வணங்கினர். கடல் கொந்தளிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
பாலை நில தெய்வம்
கொற்றவை (காளி) பாலைநில தெய்வமாக வணங்கப்பட்டார். வறண்ட நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இந்த பெண் தெய்வத்தை வழிபட்டனர்.
பண்டைய இயற்கை வழிபாடு
பண்டைய தமிழர்கள் இயற்கையை மிகவும் நேசித்தனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் இயற்கையை சார்ந்திருந்தது. இதனால் பல இயற்கை அம்சங்களை தெய்வமாக வழிபட்டனர்:
மரங்கள்
- ஆலமரம் – மருத்துவ குணம் மிக்க காய்கள், அதிக காற்று மூலக்கூறுகளை வெளியிடும் தன்மை, கருமேகங்களை ஈர்க்கும் தன்மை, நிழல் தரும் மரம் மற்றும் கால்நடைகளின் நஞ்சுக்கொடியில் இருந்து காக்க.
- அரசமரம் – மருத்துவ குணம், அதிக காற்று மூலக்கூறுகளை வெளியிடும் தன்மை, வறட்சியை தாங்கி வளரும் பண்பு.
- வேப்பமரம் – மருத்துவ குணம், சுற்றுச்சூழலுக்கு நல்லது, நிழல் தரும் மரம்.
- பூவரசு – சரும பிரச்சனைகளுக்கான மருந்தாக பயன்படுகிறது, வீடு கட்டவும் தளவாட பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது.
- புன்னை – மண்ணை உறுதிப்படுத்தி, மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது, மரத்தின் விதைகளில் இருந்து எண்ணெய் பெறப்படுகிறது, மற்றும் மரத்தின் கதிர்வீச்சுகள் நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.
மேல் குறிப்பிட்ட அணைத்து மரங்களும் மருத்துவம், சுற்றுசூழல் மற்றும் அறிவியல் நோக்கத்துடன் பயன்படுகிறது ஆதலால் இந்த மரங்களை தெய்வீக சக்தி கொண்டவையாக கருதி வணங்கினர், மரங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் இருந்தது.
இயற்கை
- சூரியன் – விவசாய உற்பத்திக்கு மூலக்கூறாக விளங்குகிறது.
- சந்திரன் – மாதங்களை கணக்கிடவும் மேலும் சந்திரனை அடிப்படையாக கொண்டு அமாவாசையில் முன்னோர்களையும் பௌர்ணமியில் நிலவு ஒளியில் இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டனர்.
- நட்சத்திரங்கள் – கால அளவினை கணக்கிட நட்சத்திரங்களின் தோன்றல் மற்றும் மறைதல் அளவை கொண்டு வருடங்களை கணக்கிட்டனர்.
- நதிகள் – நீர் அருந்த, உணவு சமைக்க தங்கள் வாழ்விடங்களை நதிகளின் அருகாமையில் அமைத்துக்கொண்டனர் மேலும் நதிகள் விவசாய வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தது
முன்னோர் வழிபாடு
தமிழர்கள் தங்கள் முன்னோர்களை தெய்வமாக வழிபட்ட முறை மிகவும் சிறப்பானது. இறந்த முன்னோர்களின் ஆவிகள் குடும்பத்தை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருந்தது. இது நடுகல் வழிபாடாக பரிணமித்தது.
நடுகல் வழிபாடு
போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு கல் நடப்பட்டது, அந்த கல்லில் வீரரின் உருவமும், பெயரும் பொறிக்கப்பட்டது இந்த கற்கள் பின்னர் வழிபாட்டுத் தலங்களாக மாறின
குலதெய்வ வழிபாடு
ஒவ்வொரு குடும்பமும் தங்கள் முன்னோர்கள் குறிப்பிட்டது போல ஒரு குலதெய்வம் வழி தோன்றல் என்று வாழை-அடி-வாழையாக அடுத்த தலைமுறைக்கு கூறப்பட்டு அந்த தெய்வத்தை முழுமுதற் கடவுளாக வழிபட்டனர், குடும்ப பாதுகாப்பிற்காகவும் தங்களின் அடுத்த சந்ததியினரின் நல்வாழ்வுக்காகவும் அந்த தெய்வத்தை வணங்கினர். குலதெய்வ கோவில்களில் சுற்றம் சூழ ஒன்றுகூடி சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டன.
பண்டைய வழிபாட்டு முறைகள்
தமிழர்களின் வழிபாட்டு முறைகள் எளிமையானவை. பெரும்பாலும் வெளிப்புற வழிபாடுகளாகவே இருந்தன:
வெறியாட்டு
முருகன் வழிபாட்டில் முக்கியமானது, வேலன் என்பவர் ஆடி பாடி தெய்வத்தை அழைப்பார் நோய் தீர்க்கவும், எதிர்காலம் அறியவும் இது நடத்தப்பட்டது.
படைப்பு
உணவு பொருட்களை நன்றி கூறும் விதமாக தெய்வத்திற்கு படைத்தல், பூக்கள் மற்றும் இலைகளை சமர்ப்பித்தல், தானியங்கள் மற்றும் பழங்களை காணிக்கையாக வைத்தல்.
சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள்
பண்டைய தமிழர்களின் சடங்குகள் இயற்கையோடு இணைந்தவை:
பருவகால சடங்குகள்
- மழைக்கால வழிபாடுகள்
- அறுவடை விழாக்கள்
- விதைப்பு காலச் சடங்குகள்
குடும்ப சடங்குகள்
- பிறப்பு சடங்குகள்
- வளர்பிறை வழிபாடு
- இறப்பு சடங்குகள்
காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள்
வரலாற்று ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன:
சமய மாற்றங்கள்
வைதீக சமயங்களின் வருகையால் பெரும்பாலான மக்கள் அதை நோக்கி படையெடுக்க மரபு பழக்கங்களை காலபோக்கில் மறந்து புதிய தெய்வங்களின் ஈர்ப்பால் வழிபட்டு முறைகளை மாற்றிக்கொண்டனர் கோவில் கட்டுமான முறைகளும் கூட மாறிப்போயின.
சமூக மாற்றங்கள்
- குலதெய்வ வழிபாட்டில் மாற்றங்கள்
- சாதி அடிப்படையிலான வழிபாட்டு முறைகள்
- நகரமயமாக்கலின் தாக்கம்
பண்டைய தமிழர்களின் தெய்வ வழிபாடு என்பது இயற்கையோடும், முன்னோர்களோடும் இணைந்த ஒரு கலாச்சார அடையாளம். அவர்களின் வாழ்வியல் முறைகள், தொழில்கள் மற்றும் சூழல் அவர்களின் வழிபாட்டு முறைகளை வடிவமைத்தன. இன்றைய காலகட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அடிப்படை நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் இன்னும் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.