வெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்!

வணக்கம்!

வாழ்வில் ஏதேனும் சாதித்துவிட வேண்டும் என்று அனைவரும் தினம் தினம் விடா முயற்சியுடன் ஓடிகொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் சாதித்து விடுகின்றனர்… ஒரு சிலர் தோல்வியை சந்திக்கிறார்கள். தோல்வி கண்ட பலரில் ஒரு சிலர் மட்டும் மீண்டும் முயற்சித்து வெற்றி அடைகின்றனர்.

இப்படி இருக்க எப்படி வெற்றி கனியை பறிப்பது என்று பல யுகங்களாக தமிழ் புலவர்களும் அறிஞர்களும் பல பாடல்களை பாடி அருளியிருக்கிறார்கள். அவற்றில் இரண்டு பாடல்களை மேற்கோள் செய்து அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்

ஔவையார்

பொருள்:

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

உட்கருத்து:

பிறரிடம் நட்பாக இருத்தல், இல்லோர்க்கு உதவுதல், கருணை இவை மட்டும் தான் பெற்றவர் வளர்ப்பில் கிடைப்பது. வேற ஏதுவாக இருந்தாலும் விடாது முயற்சி செய்தல் பழகினால் வந்து விடும். வெற்றி அடைய தேர்வு செய்த துறையில் விடாது மீண்டும் மீண்டும் முயற்சித்தால் கிடைத்துவிடும்.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

தொகுளுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன்

பொருள்:

மேலே உள்ள பாடல் TM சௌந்தரராஜன் பாடிய புகழ் வாய்ந்த பாடல். இந்த பாடலின் பொருள் ஒரு முருக பக்தன் என்னவாக இருந்தாலும் அது முருக கடவுள் வாழும் இடத்தில தான் இருப்பேன் என்று கூறுகிறார்.

உட்கருத்து:

ஒரு மனிதன் எதை செய்தாலும் அதை அவனை காட்டிலும் மிக சிறப்பாக செய்து முடிக்க யாராலும் முடியாது என்னும் அளவுக்கு மிக கட்சிதமாக செய்திட வேண்டும். அப்படி செய்ய வேண்டுமெனில் ஒரே செயலை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தால் மட்டுமே முடியும்.

வெற்றி ஒன்றும் கடினமான பாறை இல்லை, பொறுமையும் விடா முயற்சியும் இருந்தால் அனைவரும் சாதிக்கலாம்…

வாழ்த்துக்கள்!!!

Exit mobile version