குதிரை வண்டிக்காரன்

kuthirai vandikaran

ஒரு பரபரப்பான காலை பொழுது, ஓர் குதிரை வண்டிக்காரன் தன் எஜமானனின் மகனை பள்ளிக்கூடம் அழைத்து செல்ல காத்திருக்கிறான். தேவி அம்மாள் தன் மகனை வேக வேகமாக அழைத்து சென்று வண்டியில் ஏற்றிவிடுகிறாள், வண்டி புறப்படுகிறது போகும் வழியில் அச்சிறுவன் அந்த குதிரை வண்டிக்காரனை பார்த்துகொண்டே வருகிறான். அந்த வண்டிக்காரன் எழுப்பும் ஓசை, சாட்டையை சலற்றும் விதம், அவனுடைய தலைப்பாகை அச்சிறுவனை வெகுவாக கவர்ந்தது வண்டியும் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தது. அந்த வண்டிக்காரனை பற்றி யோசித்தவாரே வகுப்பறைக்குள் நடந்து சென்றான் அந்த சிறுவன்; நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் “நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?” ஒவ்வொருவராக எழுந்து பதில் சொல்லுமாறு கூறினார். மாணவர்களும் ஒவ்வொருவராக எழுந்து தான் என்னவாக போகிறோம் என்று உற்சாகமா கூறினார்கள். அனைவரும் மருத்துவர், சட்டம் போன்ற துறைகளை கூறினார்கள் ஆனால் அந்த ஒரு சிறுவன் மட்டும் தான் குதிரை வண்டிக்காரனாக ஆவேன் என்றான். அனைவரும் கேளி செய்தனர் ஆசிரியரும் வருத்தப்பட்டு அந்த சிறுவனிடம் அறிவுரைகளை கூறி சட்டம், மருத்துவம் போன்ற பெரிய துறைகளில் பணிபுரிந்தால் எண்ணற்ற மக்களுக்கு உதவலாம் என்று கூறி அச்சிறுவனின் மனதை மாற்ற முயற்சித்தார் ஆனால் அந்த மாணவனோ சற்றும் செவிசாய்க்காமல் குதிரை வண்டி ஓடுவதிலேயே உறுதியாய் இருந்தான்.

அந்த மாணவனின் தந்தை ஊரில் பிரபலமான ஒருவராக இருந்ததால், ஆசிரியர்க்கு முன்பே அவன் தந்தையை பற்றி தெரிந்திருந்தது. அச்சிறுவனின் எதிர்காலம் வீணாகிவிட கூடாது என்றெண்ணி ஒருநாள் அந்த மாணவனின் வீட்டிற்கே சென்று அவன் தந்தையிடம் வினவ சென்றார் ஆனால் அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் தாய் தேவி அம்மாளிடம் நடந்ததை கூறினார், அந்த மாணவனின் தாயும் வருத்தப்பட்டு அச்சிறுவனின் மனதை மாற்ற முயற்சி செய்கிறேன் என்று கூறினார்.

தாய் தேவி அம்மாள் அச்சிறுவன் மீது கோவப்படாமல் இதை பற்றி தீவிரமாக சிந்தித்தார். ஒருநாள் அந்த சிறுவன் பள்ளி முடித்து வீடு வந்ததும் தாய் அவனிடம் ஆசிரியர் கேட்ட அதே கேள்வியை கேட்டார், மீண்டும் அவன் தான் குதிரை வண்டிக்காரன் ஆவேன் என்றான். தாய் கோவிக்காமல் அந்த சிறுவனை முகம் கை கால்கள் கழுவி சுத்தம் செய்து வர சொன்னார்கள் அவனும் அப்படியே செய்தான் அவனுக்கு இனிப்புகளும் தின்பண்டங்களும் குடுத்து சாப்பிட செய்தார்.

சாப்பிட்டவுடன் அச்சிறுவனை பூஜை அறைக்கு அழைத்து சென்று ஒரு புகைப்படத்தை காட்டி மகனே இவரும் குதிரைவண்டிக்காரர் தான் இவர் உலகிலேயே மாவீரரான அர்ஜுனனுக்கு குருச்சேத்திர போரில் வழிகாட்டியாக இருந்து தர்மத்தை நிலைநாட்டி மனிதகுலத்தை காத்தார்; நீ இவரை போன்ற குதிரை வண்டிக்காரர் ஆவாயா என்றார் இதை கேட்டவுடன் அந்த சிறுவன் தன் தாயின் கால்களை தொட்டு வணங்கி நிச்சயம் ஆவேன் அம்மா என்றார். அவர்தான் சுவாமி விவேகானந்தர்.

Exit mobile version