தமிழர்களாகிய நாம் அனைவரும் நம் பெரியோர்களால் “ஆமை புகுந்த வீடு நன்றாக இருக்காது” என்று சொல்லப்படுவதை கேட்டிருக்கிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் அதற்க்கு உண்மையான காரணத்தை இந்த கால சந்ததிகள் ஆகிய நாம் எவ்வாறு புரிந்து கொண்டோம்.
நாம் புரிந்து கொண்ட காரணங்கள்,
“ஆமை என்ற உயிரினத்தை வீட்டில் வளத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது”. அது தவறு
ஸ்டார்ட் அப், உலக சந்தை மற்றும் கார்ப்பொரேட் கம்பெனிகள் அதிகம் வளரும் இந்த காலம் தமிழர்களுக்கு ஒன்றும் புதிது இல்லை 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாம் கப்பல்களில் பயணம் செய்து கடல் தாண்டி மற்ற மண்ணில் வியாபாரம் செய்தவர்கள்.
கடல் பயணத்தை நம் முன்னோர்கள் ஆமையை வைத்துதான் கண்டறிந்தார்கள். மேலும் அப்போதெல்லாம் பெரும்பாலான வீட்டிலும் ஆமையை வளர்த்து வந்தார்கள் இன்றும் பெரிய கோவில்களின் சிற்பங்களில் அதிக ஆமை சிற்பங்கள் இருப்பதை காண முடியும்.
நம் பெண்கள் கருவுற்றிருக்கும் போது தாய் வீட்டுக்கு செல்வதை கூட ஆமையிடம் இருந்து தான் பழக்கப்படுத்தி கொண்டோம்.
ஆமாம் ஆமை வருடம் முழுவதும் எங்கு பயணம் செய்தாலும் இனப்பெருக்க காலத்தில் தன் தாய் பூமிக்கே வந்துவிடும்.
நம் தமிழர்கள் உலகம் முழுவதும் கடல் பயணம் செய்தார்கள் என்ற சாட்சியாக இன்னும் பல கண்டங்களில் நாடுகளில் ஆங்காங்கே தமிழில் பெயர் இருப்பதை நம்மால் காண முடிகிறது.
அதனால் “ஆமை புகுந்த வீடு நன்றாக இருக்காது” என்பதற்கு வீட்டில் ஆமையை வளர்ப்பதனால் கெட்டுவிடும் என்பது காலப்போக்கில் நம்மால் தவறாக புரிந்து கொண்ட விளக்கங்கள்.
இந்த கருத்திற்கு அதுமட்டும் இன்றி மற்றொரு தகவலும் பரவலாக நம்பப்படுகிறது “ஆமைக்கு தமிழில் இன்னொரு அர்த்தம் சனி” அதனால் ஜோதிட வல்லுநர்கள் சனி புகுந்த வீடு நிம்மதி அளிக்காது என்பார்கள்.
ஜோதிட கூற்று படி பார்க்கும் போதும் சனி பகவான் சூரியனின் இரண்டாவது மகன், மூத்த மகன் எமன்.
சனி ஆயுள் காரகன் அவரது அண்ணன் உயிரை பறிக்கும் தர்ம பகவான். சனி கொடுக்க முற்பட்டால் சும்மா அதிரும்முள்ள என்று சொல்கிற மாதிரி கொடுப்பார் யாராலும் தடுக்க முடியாது, நம் குணம் மற்றும் செயல்களை பொறுத்து நமக்கு நன்மை கொடுப்பதும் துன்புறுத்துவதும் அவருடைய தர்மம்.
ஜோதிட கூற்று படி பார்க்கும் போதும் இந்த பழமொழி சரியாக இல்லை, அப்படியிருக்கும் போது உண்மையில் என்னவாக இருக்கும்.
அறிவியல் கூற்று படி பார்த்தல் “ஆமை புகுந்த வீடு கெடும்” என்பதற்கு கீழ்வரும் அர்த்தம் பொருந்துகிறது.
“கல்லாமை, முயலாமை, அறிவில்லாமை, இயலாமை, பொறாமை, எழாமை போன்ற தீய குணங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்குள் இருந்தால் வீட்டுக்கு ஆகாது.
ஆமையை நீர்வழிப் பாதைகளை கண்டு பிடிப்பதற்கு பயன்படுத்துவர். ஆமை எப்போதும் தாழ்வான, ஈரப் பதம் உள்ள இடங்களை நோக்கியே செல்லும்.
ஆமை புகும் அளவுக்கு நம் வீடு இருந்தால் நாம் வீட்டினை ஏரியிலோ, குளத்திலோ கட்டி இருக்கிறோம் என அர்த்தம் அல்லது நாம் வாழ தகுதியே இல்லாத இடத்தில் வீடு கட்டி உள்ளதாக அர்த்தம்.
ஆக அந்த மாதிரி வீட்டில் வசித்தால் உடல் நலம் கெடும், வீடும் உருக்குலைந்து விடும் என முன்னோர்கள் ஆமைப் புகுந்த வீடு விளங்காது என சொல்லியிருக்கின்றார்கள்.
ஓர் ஆமை அவ்வளவு எளிதாக ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிட முடியுமா?
அதன் வேகத்துக்கு அது வாசலைக் கடந்து வீட்டுக்குள் வரவே பல மணி நேரம் ஆகுமே! ஒருவேளை இவ்வளவு மெதுவான ஆமை புகுவதைக் கூட கவனிக்க முடியாத அளவு அலட்சியமாக இருக்கும் சோம்பேறித்தனமான வீடு எப்படி உருப்படும்.
இவ்வாறு மெதுவாக செல்லக்கூடிய பிராணியை கூட தெரியாமல் இருந்தால், அந்த வீட்டிற்குள் அந்நியர்கள் கூட மிக எளிதாக நுழைந்து விடலாம் போலும். இதன் காரணமாக தான் ஆமை நுழைந்த வீடு உறுப்படாது என்ற பழமொழி கூறப்பட்டதோ ஏனோ.
மற்றபடி ஆமைக்கும் கெட்ட சகுனத்திற்கும் வேறு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. ஆமை ஒரு சாதுவான பிராணியாகும்.